பறையர் சங்கம்

பறையர் சங்கம்

இணைவோம் பறையராய்!
எழுவோம் பறையராய்!
மேலும் அறிய
பறையர்களே தமிழகத்தின் பூர்வ குடிகள் என்பது அனைவரும் அறிந்ததே. கற்றறிந்த பல பேரறிஞர்களின் வாய் மொழியும் , பல வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களும் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன . 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 12% மக்களைக்கொண்ட பேரினமாக நாம் இருக்கின்றோம். இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கும், தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், அரசிடம் இருந்து அடைப்படை வசதிகளை நாம் பெற்றுக் கொள்வதற்கும், நம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கடன் பெற்று தருவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் நமக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கும், அரசியல் மற்றும் தொழில் துறைகளில் நம் ஆளுமையை நிலை நாட்டுவதற்கும் , பறையர் பேரின வரலாற்றை நம் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுவதற்கும் நம் பறையர் சங்கம் துவங்கப் படுகிறது.
சங்கத்தின்

செயல்பாடுகள்

ஆங்கிலேயர் காலத்தில் பறையரின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, மாவட்ட வாரியாக மறு கள ஆய்வு செய்து, அந்நிலங்களை மீட்டு பறையர் இன மக்களுக்கு வழங்கி, நம் சமுதாய மக்களை நில உடைமையாளர்களாக மாற்றவது நமது செயல் திட்டங்களில் முதன்மையானதாகும்.

மேலும் அறிய
சங்கத்தின்

திட்டங்களும் செயல்பாடுகளும்

01. அரசு பதவியில் உள்ள இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை சங்கத்துக்கு வரவழைத்து சங்க உறுப்பினர்களுக்கு அரசால் செயல்படுத்தும் திட்டங்களை பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
02. அரசு மானியத்துடன் தொழிற்கடன், வங்கிகள் மூலமாக உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
03. ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள ஆசிரியர் பெருமக்களை அழைத்து வந்து, உயர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.
04. முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மத்திய/மாநில அரசின் திட்டங்களை, அரசின் வழிகாட்டுதலுடன் அவர்களுக்கு பெற்றுத்தர ஆலோசனைகள் வழங்கப்படும்.
05. நம் சமுதாய மக்கள் வாழும் பகுதிகளில் சாலை, குடிநீர், மயானம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
06. உறுப்பினர்களுக்கு பெண் ஒருங்கிணைப்பாளரையும், ஆண் உறுப்பினர்களுக்கு ஆண் ஒருங்கிணைப்பாளரையும் நியமனம் செய்து சங்கம் செயல்படும்.
07. பறையர் சொந்தங்களுக்கு திருமண தகவல் மையம் உருவாக்கப்படும்.
08. சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
09. சங்க உறுப்பினர்களின் குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியருக்கு வருடம் தோறும் சங்கத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படும்.
10. பறையரின பிரச்சனைகளுக்கு தீர்வ காண வழக்குரைஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
11. மாதம் ஒருமுறை சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
போராட்டங்கள்

பறையர் சங்கத்தின் பணிகள்

Join as Member

உறுப்பினர் சேர்க்கை

சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
பறையர் சங்கத்தில் உறுப்பினராக.
சங்கத்தின் பணிகள்

சமீபத்திய நிகழ்வுகள்

பட்டா மாறுதலுக்கு எதிரான போராட்டம்
உள்ளாட்சி தேர்தல்
புறக்கணிப்பு
பட்டா மாறுதலுக்கு எதிராக ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்
உங்கள் பார்வைக்கு

அடுத்த போராட்டம்